வாழ்வில் நல் ஒழுக்க நெறிகளைப் போதிக்கும் பிற மொழி நூல்கள் தமிழில்
மொழி பெயர்க்கப் பட வேண்டும் என்னும் தணியாத ஆர்வத்தோடு ஊக்கமும்,
ஆதரவும் இந்தப் புத்தகத்திற்கு வாழ்த்துரையும் அளித்துள்ள குவைத் தமிழோசையின் கௌரவத் தலைவர் சாதிக்கும் அண்ணன் சாதிக்பாட்சா அவர்களுக்கும்,வந்தவர்களை வரவேற்கும் குவைத் தமிழோசையை இனிய குடும்பமாக வழிநடத்தும் தலைவர் முனைவர் அண்ணன் குமார் அவர்களுக்கும்,தன் இடையறாத பணிகளுக்கும் பொறுப்புகளுக்கும் இடையே இந்தப் புத்தகத்தை படித்து தன் கருத்தையும் பாராட்டும் அளித்து குவைத் தமிழோசையின் சார்பில் நினைவுப் பரிசும் வழங்கிய குவைத் தமிழோசையின் முதன்மை கொடையாளரும், உழைப்பின் சிகரமாக விளங்கி வளைக்குடா தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் டிவிஎஸ் டிராவல்ஸ் & கார்கோ தொழில் அதிபர் டாக்டர். எஸ்.எம்.ஹைதர் அலி சார் அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழோசையை சேர்ந்த அன்பான எல்லா உள்ளங்களுக்கும் , குவைத்தின் மலர்ந்த முகங்களுக்கும் ,இங்கு நான் சந்தித்து பழகியுள்ள எல்லா இனிய நண்பர்களுக்கும் என் இதயம் நிறைந்த நன்றிகளையும் நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். தங்களுடைய நெருக்கடியான கணிணி துறை அலுவலக பணிகளுக்கு நடுவில் எந்த எதிர்பார்ப்புமின்றி தமிழை அடுத்த நிலைக்கு எடுத்துச் சென்று விட வேண்டும் என்ற கனவை நனவாக்கி காலம் போற்றும் தமிழ்ப் பணி செய்துள்ள FTEbooks குழுவிற்கும் அதன் தலைவர் திரு.சீனிவாசன் அவர்களுக்கும் எல்லோரின் சார்பில் நன்றியை தெரிவிக்கிறேன். ஆங்கில புத்தக இணையத் தளம் ஒன்றின் ஓரத்தில் இருந்த என் முதல் மொழிபெயர்ப்பு நூலைக் கண்டு என்னை தொடர்புகொண்டு FTEbooksல் இந்தப் புத்தகங்கள் இடம் பெறுவதற்கு காரணமாக இருந்த திரு.அன்வர் அவர்களுக்கும் , முன் அட்டைப் படத்தை அழகுற வடிவமைக்கும் திரு.மனோஜ் அவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். http://wk.w3tamil.com/ ,நீச்சல்காரன் ஆகிய இரு விலையில்லா தமிழ் மென்பொருள்களை பற்றி அறிவுறுத்தி கணிணியில் தமிழில் தட்டச்சு செய்வது, எழுத்துப்பிழை திருத்துவது போன்றவை கடினமல்ல என்று நேரத்தை பாராமல் விளக்கிய அன்வருக்கு மீண்டும் நன்றியைத் கூறிக் கொள்கிறேன். எல்லோருக்கும் இறைவன் அருள் கிடைக்க வேண்டிக் கொள்கிறேன். நன்றி. அன்புடன் சே.அருணாச்சலம் சென்னை 18.01.16 டவுன்லோட் லிங்க் : MEDIAFIRE |
Labels: EBOOKS , மொழிபெயர்ப்பு நாவல்
Hi,karthik
Please upload new
stories
Hi,karthik
Please upload new
stories