"காமராஜ் நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள்' - நிச்சயம் படிக்க வேண்டிய இன்னுமொரு ‘சத்திய சோதனை’

எந்த நேரத்தில் கூட்டம் என்றாலும் பெரியார் குறிப்பிட்ட நேரத்தில் மேடையில் இருப்பார். ஆனால் கூட்டம் தொடங்கி ஒருமணி நேரத்திற்குப்
பிறகுதான் அண்ணா வருவார். அவரைப் பார்த்ததும் "அண்ணா வாழ்க' என்று உரத்த குரலில் கூட்டத்தினர் முழக்கமிடுவர். அந்த ஒலிக்கிடையே வந்து மேடையில் அமர்வார் அண்ணா. இதனால் அவர் வரும் நேரத்தில் மேடையில் யார் முழங்கிக் கொண்டிருந்தாலும் தொடர்ந்து பேச முடியாமல் போகும். சர்வக் கட்சிக் கூட்டமாக இருந்தால் அதில் பேசுகின்ற மற்ற கட்சித் தலைவர்களுக்கும் இந்த சோதனை நடக்கும். ஆனால் அந்த அண்ணாவுக்கும் இதுபோல் ஒரு சோதனை 1960-ம் ஆண்டு ஒரு கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தபோது நேரிட்டது. அப்போது எம்.ஜி.ஆர். வரவே கூட்டத்தினர் ஒரேயடியாக ஆரவாரம் செய்ய அண்ணாவாலேயே சில நொடிகள் பேச முடியாத நிலை ஏற்பட்டது. இதே போன்ற சோதனை பெருந்தலைவர் காமராஜருக்கு ஏற்பட்டபோது அதை அவர் சாமர்த்தியமாக சமாளித்தார். எப்படி?
1964-ம் ஆண்டு தமிழ் தேசியக் கட்சி இந்திய தேசியக் காங்கிரúஸôடு இணைந்த கூட்டம். திருச்சியில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பலர் பேசிய பின் காமராஜர் பேசிக் கொண்டிருந்தார். நாட்டு நடப்பு, மக்கள் நிலை பற்றி ஆழமாகவும் அழுத்தமாகவும் உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. கைத்தட்டல் வந்த இடத்தை தலைவர் கூர்ந்து பார்த்தார். அங்கே வந்து கொண்டிருந்தவர் கவியரசர் கண்ணதாசன்! அவரைப் பார்த்துவிட்ட பெருந்தலைவர் காமராஜர், ""யாரு? கண்ணதாசனா? ஏ...கிறுக்கா...அப்படியே உட்காரு!'' என்று ஒலிபெருக்கியிலே ஒருபோடு போட்டார். கண்ணதாசனும் அப்படியே தரையில் அமர்ந்தார்!
தலைவர் உரைக்குப் பிறகு கண்ணதாசன் என்ற எரிமலை முழக்கமிட கூட்டம் நிறைவு பெற்றது.
தலைவர் தன்னை, "கிறுக்கா' என்று சொல்லி வாழ்த்த மாட்டாரா என்று ஏங்கியவர்கள் பலர் உண்டு. ஏனெனில் தலைவர் தனது இதயப்பூர்வமான அன்பை அந்தச் சொல் மூலமே வெளிப்படுத்துவார்!
இவரைப் பற்றி
என்னை எழுதத் தூண்டியது
இன்றைய தலைமுறை
நிச்சயம் படிக்க வேண்டிய
இன்னுமொரு ‘சத்திய சோதனை’
இவர் வழியில்
புதிய பாரதம் படைக்கப் புறப்படுவோம்
இவண்
இளசை சுந்தரம் 

இது வலைதளத்தின் மறு பதிவு ......

டவுன்லோட் லிங்க் :
MEDIAFIRE

ZIPPYSHARE 

Labels: , ,Leave A Comment:

மின்னஞ்சல் மூலம் தொடருங்கள்

இதுவரை பகிர்ந்த பதிவுகள்

OrathanaduKarthik. Powered by Blogger.