பாரிஸுக்குப் போ - ஜெயகாந்தன் நாவலை டவுன்லோட் செய்ய .

 சில சூழ்நிலைகளில் மனிதர்கள் இப்படியும் முடிவுகளை எடுக்க யோசிப்பார்களா? என்று நாம் யோசிக்குபோதே அந்தக் கதையில் வரும்
கதாபாத்திரம் அதை எடுத்து வாழ்ந்து கொண்டு கடந்துபோய்க் கொண்டிருக்கிறது. நிஜ வாழ்க்கையில் சாத்தியமில்லை என்று தோன்றினாலும், அது யாருடைய தவறு என்பதை நமக்கு உணரவைக்கிறது. தனிமனிதனின் கருத்துக்கள் அல்லது அவனது பார்வையே அவனச் சுற்றி இருக்கும் சமுதாயத்தைக் கட்டமைக்கிறது என்பதை யாராலும் மறுக்கமுடியுமா?
உங்களுக்குச் சுதந்திரமான சரியெனப் படும் முடிவுகளை எடுத்து ஒரு இயல்பான வாழ்க்கையை உங்களால் வாழ முடிகிறதா என்ற கேள்வியை உள்ளுக்குள் கேட்டுப்பார்த்தால் அதற்கான
விடை உங்களிடம் இல்லை ஆனால் அது இந்தச் சமூகத்திடம் இருக்கிறது.
ஒரு கட்டமைப்புக்குள் நம்மைக் கட்டுவித்துக்கொண்டு அதுக்குள்ளே ஏற்படும் இன்பதுன்பங்களைத்தான் வாழ்க்கையாக வாழ்கிறோமோ என்ற எண்ணமே தோன்றுகிறது. இதில் தான் வாழ்க்கையின் அடிப்படை உரிமைகள் ஏன் வாழ்வின் அடிப்படையையே தொலைக்கிறோம்.
இதைத்தான் தெளிவாக உணர்த்துகிறது இந்த நாவலில் வரும் லலிதா - சாரங்கன் கதாபத்திரங்கள்.
சில நிமிடங்களில் கடந்து போகும் நரசய்யா கதாபாத்திரம் காதலைப் பற்றிச் சொல்லும் கருத்துக்கள் இங்குக் காதலிப்பதாகச் சொல்பவர்களுக்கு எவ்வளவு அவசியம்.
அதனை அவர் ஒரு ரஷ்யா மொழிக்கதையில் வருவதாக மேற்கோள் காட்டினாலும் அவர் வாழ்ந்து அனுபவத்ததின் வலியாக உணர்ந்ததைச் சொல்கிறார் என்பதை அவர் இறக்கும்போது தெரிந்துகொள்ள முடிகிறது.
அவர் சொல்வது, காதலிப்பவர்களே உங்களின் காதலுக்காகச் சிறிய தவறுகளைக் கூட மன்னிக்காமல் பிரிந்து ஒருவரையொருவர் பழிவாங்கித் துன்பத்தில் ஆழ்த்தி வாழ்க்கையைத் தொலைத்தால் அது உண்மைக் காதலா? காதலென்பது கருணை,தியாகம்,சகிப்புத்தன்மை,மன்னிக்கும் பெருநோக்கு என்ற எல்லா அம்சங்களும் கொண்டதே தவிரச் சிறிய தவறுகளுக்குத் தண்டனை என்ற பெயரில் உதறிதத்ள்ளுவது இல்லை, அப்படியிருந்தால் அது உண்மையில்லை.
இதேதான் இன்று நமது சமூகத்திலும் நடக்கிறது. விவாகரத்து என்ற பெயரில் நடப்பது என்ன? உணரமுடிகிறதா அதுவும் ஒருவிதப் பழிவாங்கல்தான் என்பதை?. இப்போதைய காதல் உடலைப் பார்த்த எண்ணிக்கையில் ஓரிரு முறை மனதைப் பார்த்து இருந்தால் பிழைத்திருக்க வாய்ப்புகள் இருக்கிறது.. உடையுள்ள புற அழகில் உருவாகி ஆடையில்லா வெற்றுடம்பில் முடிந்து போகும் உணர்ச்சிக்கு காதல் என்ற பெயர் பொருத்தமாக இல்லை.
இல்லை இல்லை எங்கள் காதல் உணமையானது என்று சில வருடங்களில் விவகாரத்தை நோக்கி செல்பவர்களின் மனதில் மீந்து இருப்பது என்ன அவர்கள் செய்ததாகச் சொல்லும் உண்மைக்காதலா? நான்கு சுவர்களுக்குள் நடந்த விசயங்களா?
எனது இந்தக் கருத்தை ஒரு பதிவில் சொல்லியபோது ஒரு நண்பர் எனக்குக் காதலிக்கத் துப்பில்லை அதனாலதான் இப்படிப் பேசுகிறேன், கொஞ்சம் புத்தகம் படித்த திமிர், மேதாவித்தனம் என்றெல்லாம் சொல்லிவிட்டு ஒருவருடத்தில் தற்கொலைக்கு முயற்சி செய்து நண்பர்களால் காப்பாற்றப் பெற்றார். காரணம் அதே காதல்.
காதல் தப்பில்லை, காதலை எப்படிக் காதலிக்கிறிர்கள் என்பதில்தான் அப்போதைய காதலும், அதற்க்குபின்னதான வாழ்கையும் இருக்கிறது.
முடிவாக, எழுத்துக்கள் வெறுமனே பொழுதுபோக்குக்கும், ரசனைக்கும் மட்டுமில்லாமல் மனதில் இருக்கும் எண்ணங்களை வழிப்படுத்தி விசாலமான மனப்பாங்கை உருவாக்குவதில் பெரும்பங்கை வகிக்கிறது என்பதை உணரும்போது வாசிப்பனுவம் இன்னும் உயரியதாகிறது.
முடிந்தால் இந்த நாவலைப் படித்துப்பாருங்கள் அருமையான ஒன்று.

டவுன்லோட் லிங்க் :
MEDIAFIRE -30 MB
(அல்லது )
MEDIAFIRE -30 MB

Labels:Leave A Comment:

மின்னஞ்சல் மூலம் தொடருங்கள்

இதுவரை பகிர்ந்த பதிவுகள்

OrathanaduKarthik. Powered by Blogger.