ஏழாம் உலகம் - ஜெயமோகன் நாவல் .

ஜெயமோகன் எழுதிய ஆறாவது நாவல் ஏழாம் உலகம். 2004ல் இந்நாவல் வெளிவந்தது. ஏறத்தாழ இருநூறு பக்க அளவுகளைக் கொண்டது. தமிழினி
பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது. மனிதர்களில் கடையர்களாக வாழும் பிச்சைக்காரர்களைப் பற்றிய நாவல் இது. மனிதர்களை எவ்வாறு பிச்சைக்காரர்களாக ஆக்கி விற்கவும் வாங்கவும் செய்கிறார்கள், மிருகங்களைப்போல வாழும் அவர்களுடைய வாழ்க்கையில் என்ன வகையான உணர்ச்சிகள் நிலவுகின்றன என்பதை இந்நாவல் காட்டுகிறது. பாலா இயக்கிய நான் கடவுள் என்ற படத்துக்கு இந்த நாவலே ஆதாரம்.
போத்திவேலுப் பண்டாரம் என்பவரே இந்நாவலின் கதாநாயகன். நடுவயதை தாண்டிய அவர் பிச்சைக்காரர்களை விலைக்கு வாங்கி உடைமையாக வைத்திருந்து கோயில் வாசல்களில் அவர்களைபோட்டு பிச்சையெடுக்கச் செய்து வாழ்கிறார். அதைப்பற்றிய குற்ற உணர்ச்சி ஏதும் அவருக்கு இல்லை. தன்னை ஒரு நல்ல மனிதர் என்றே எண்ணுகிறார்.
போத்திவேலுப்பண்டாரத்தின் சொந்த வாழ்க்கை ஒருபக்கமும் பிச்சைக்காரர்களின் அன்றாட வாழ்க்கை ஒருபக்கமுமாக நாவல் வளார்ந்து செல்கிறது. சாதாரண நடுத்தர வர்கத்தவனாகிய போத்திவேலு பண்டாரம் மகள்கள் மேல் உயிரையே வைத்திருக்கிறார். முதல் மகள் கல்யாணமான உடனேயே அப்பாவிடம் கணக்கு பேசி சொத்தை வாங்க ஆரம்பிக்கிறாள். இன்னொரு மகள் விபச்சார வணிகம் செய்யும் ஒருவனுடன் ஓடிப்போகிறாள்.
'உருப்படிகள்' என்று பண்டாரம் சொல்லும் பிச்சைக்காரர்கள் அவர்களுக்குள் நகைச்சுவை பேச்சும் சுயநலம் இல்லாத அன்புமாகவே இருக்கிறார்கள். குய்யன் என்ற களங்கமில்லாத தொழு நோயாளி, விவேகம் கொண்டவரான ராமப்பன், ஆங்கிலம் பேசும் அகம்மது, ஒரு குடும்பப்பெண்ணாக வாழவேண்டும் என்ற கனவுடன் வாழும் எருக்கு என்று பலவகையான பிச்ச்சைக்காரர்கள் உள்ளார்கள். அவர்கள் நடுவே சித்தரான மாங்காண்டிச்சாமியும் பிச்சைக்காரராக அமர்ந்திருக்கிறார்.
இந்த இரு உலகங்களும் ஒப்பிடப்படுகின்றன. பண்டாரத்தின் அன்றாட உலகில் மாப்பிள்ளையை விலைக்கு வாங்கும்போது பிச்சைக்காரர் உலகில் பிச்சைக்காரர்கள் விலைக்கு வாங்கப்படுகிறார்கள். இரு இடத்திலும் உருப்படி என்ற சொல் புழங்குகிறது.
முத்தம்மை என்ற ஊனமுற்ற பெண் ஒரு ஊனமுற்ற குழந்தையை பெறும்போது ஆரம்பிக்கும் நாவல் அவள் மேலும் ஊனமுற்ற குழந்தையைப் பெறுவதற்காக எப்படி இன்னொரு ஊனமுற்ற பிறவியுடன் குரூரமாக புணர வைக்கப்படுகிறாள் என்ற இடத்தில் முடிவுக்கு வருகிறது.
தமிழில் அடித்தள மக்களைப் பற்றி எழுதப்பட்ட நாவல்களிலேயே குரூரமான தீவிரமான நாவல் இது. ஆனால் நல்ல நகைச்சுவையுடன் எழுதபப்ட்டிருக்கிறது. எந்த அடிநிலைக்குப் போனாலும் மனிதன் மனிதப்பண்புகளை இழப்பதில்லை என்று காட்டும் நாவல் இது.

குறிப்பு :இந்த நூலை பற்றி சம்பந்த பட்ட தரப்பிலிருந்து எதிர்ப்புகள் வரும் பட்சத்தில் எந்த ஒரு முன் அறிவிப்பும் இன்றி டவுன்லோட் லிங்க் நீக்க படும் . 

இந்த நூல் மட்டும் அல்ல இந்த வலைதளத்தில் உள்ள எல்லா வகையான மின்னூலுக்கும் இது பொருந்தும் .

நன்றி :ஒரத்தநாடு கார்த்திக் .
அன்புள்ள கார்த்திக்

உங்களது ஒரத்தநாடு கார்த்திக் தளத்தில் ஜெயமோகனின் புத்தகங்களை அவரது அனுமதி இல்லாமல் சட்டத்திற்கு புறம்பாக தரவேற்றி இருக்கிறீர்கள். நாங்கள் அவரது புத்தகங்களை ஈபுக் ஆகா குறைந்த விலையில் NewsHunt மூலம் கொண்டு வந்து கொண்டிருக்கிறோம். எனவே அவரது "அனைத்து" புத்தகங்களையும் உங்களது தளத்தில் இருந்து எடுத்துவிடவும் மேலும் எந்த புத்தகங்களையும் தரவேற்ற வேண்டாம் என்றும் இதன் மூலம் கேட்டு கொள்கிறோம். உங்கள் தளத்தில் இருந்து அகற்றியவுடன் எங்களுக்கு தெரியபடுத்தினால் மிகவும் நல்லது. 

நன்றி
சரவணன் விவேகானந்தன்


டவுன்லோட் லிங்க் :
MEDIAFIRE


Labels: ,2 Responses to " ஏழாம் உலகம் - ஜெயமோகன் நாவல் . "

  1. சிவா says:

    மிக்க நன்றி நண்பரே.. நாஞ்சில் நாடன் சிறுகதை தொகுப்புகள் கிடைத்தால் பதிவேற்றுங்கள்.. சிறப்பாக இருக்கும்.. நன்றி..

  2. ஜெயமோகனின் விஷ்ணுபுரம் கிடைக்குமா சகோரரே

Leave A Comment:

மின்னஞ்சல் மூலம் தொடருங்கள்

இதுவரை பகிர்ந்த பதிவுகள்

OrathanaduKarthik. Powered by Blogger.