ஒரு மோதிரம் இரு கொலைகள் -ஷெர்லாக் ஹோம்ஸ் துப்பறியும் நாவல் .

ஆர்தர் கோனான் டாயில் என்ற ஆங்கில எழுத்தாளர் எழுதிய ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகளில் முதலாவது A Study in Scarlet. அது “ஒரு மோதிரம்
இரு கொலைகள்“ என தமிழாக்கம் செய்யப்பட்டது.

டாக்டர் ஆர்தர் கோனன் டாயில் அவர்களால் உருவாக்கப்பட்ட ஒரு கற்பனைப் பாத்திரம் தான் ஷெர்லாக் ஹோம்ஸ். அந்தக் கதாப்பாத்திரத்தை, துப்பறியும் கலையில் கை தேர்ந்தவராக சித்தரித்திருப்பார்.  நுட்பமான அறிவாற்றல் கொண்டவராகவும், எப்படிப்பட்ட சிக்கலான வழக்குகளையும் திறம்பட ஆராய்ந்து உண்மையை கண்டறியும் வல்லுனராகவும் இந்தப் பாத்திரத்தை அவர் படைத்திருப்பார். இக்கதை முழுவதும், ஷெர்லாக் ஹோம்ஸின் அறைத்தோழர் டாக்டர் ஜான் வாட்சனின் பார்வையிலிருந்து சொல்லப்பட்டிருக்கும்.

துப்பறியும் தொழிலில் ஈடுபடாத, ஆனால் அதில் ஆர்வமுள்ள, யூகத்தில் தேர்ந்தவராக ஹோம்ஸ்... அருமையான புத்திசாலித்தனம். அவர் நடவடிக்கைகள் மீதான நண்பர் வாட்சனின் ஆச்சர்யம், படிக்கும் நமக்கும் தொற்றிக்கொள்வதில் ஆச்சர்யமேயில்லை. ரத்தக்கறையை அடையாளம் காணும் கலவையை கண்டுபிடிப்பதில் ஆரம்பித்து, இரட்டைக் கொலையை வெகு சாதாரணமாய் துப்பறிந்து முடிவு சொல்லுவது வரை ஹோம்ஸ் கலக்கியிருக்கிறார்.
ஜன்னல் வழியே சாலையில் நடக்கும் ஒருவரை, கப்பல்படை மேஜர் என்றும் அதற்கான அடையாளங்களையும் தெள்ளத்தெளிவாக விளக்குவதும் யதார்த்தம். நமக்கே “அட ஆமாம்ல“ என்று கொஞ்சம் தாமதமாகத் தோன்றும். கொலையாளியின் பூட்ஸ் அடையாளத்தில் ஆரம்பித்து, அடுத்து என்ன நடக்கும் என்பதை சரியாகக் கணிக்கும் அவருடைய சரியான யூகம் பாராட்டுக்குரியது. 

டவுன்லோட் லிங்க் :

MEDIAFIRE 

Labels:2 Responses to " ஒரு மோதிரம் இரு கொலைகள் -ஷெர்லாக் ஹோம்ஸ் துப்பறியும் நாவல் . "

  1. இந்த நாவலுக்கு நன்றி..

  2. Anonymous says:

    Thanks pls post more

Leave A Comment:

மின்னஞ்சல் மூலம் தொடருங்கள்

இதுவரை பகிர்ந்த பதிவுகள்

OrathanaduKarthik. Powered by Blogger.